பினாங்கு கேளிக்கை சந்தை 2014

படம் 1: மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கேளிக்கை சந்தையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
படம் 1: மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கேளிக்கை சந்தையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

பினாங்கு கேளிக்கை சந்தை பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி வட மலேசிய வாழ் மக்களும் ஆவலாக எதிர்பார்க்கும் வருடாந்திர விழா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கேளிக்கை சந்தை 25/11/2014 தொடங்கி 31/12/2014 வரை, அதாவது 37 நாட்களுக்கு நடைபெறும். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் “வாருங்கள் கேளிக்கை சந்தைக்குச் செல்வோம்” என்ற கருப்பொருளுடன் கேளிக்கை சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பொது மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு கேளிக்கை சந்தையின் நுழைவுக் கட்டணம் கடந்த ஆண்டு போலவே ரிம3.00 (பெரியோர்கள்) ரிம1.00 (சிறியோர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தையில் 176 கடைகள் அதாவது மின்னியல் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் எனப் பலவகை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்த குத்தகை முறையைப் பின்பற்றி வியாபாரிகள் இந்தச் சந்தையில் கடைகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கோட்பாட்டைப் பின்பற்றி செயல்படுகின்றனர் என்பது வெள்ளிமலையே.

pix 2இந்த கேளிக்கை சந்தைக்கு வரும் வருகையாளர்களைக் கவரும் வகையில் மேடை நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார போட்டி, அதிர்ஷ்ட்ட குழுக்கல், போட்டி விளையாட்டுகள், பாட்டுப்போட்டி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். 48-வது முறையாக நடைபெறும் கேளிக்கை சந்தையைச் சிறப்பாக வழிநடத்தும் பினாங்கு மாநில நிதி துறைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார் மாநில முதல்வர்.
இந்த கேளிக்கை சந்தை துவக்க விழாவில் மாநில செயலாளர் டத்தோ பாரிசான் பின் டாருல், மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி ஹஸ்னோன், மாநில சட்டமன்ற சபாநாயகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.