“பினாங்கு தன்னார்வ ரோந்து படை”(பிபிஎஸ்) சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழக பொருளாளர் அமைப்பின் கீழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தை காவல்துறையாக (kepolisan masyarakat) செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார் மாநில முதல்வர் மேதகு லின் குவான் எங்.
இத்திட்டமானது மலேசிய காவல்துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி பினாங்கு மாநிலத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றியமைக்க மாநில அரசின் மேற்கொண்ட அரிய முயற்சி என மாநில முதல்வர் தமதுரையில் வர்ணித்தார். பினாங்கு காவல்துறையினர் குற்றங்களை துடைத்தொழிக்க பாடும்படும் வேளையில் மக்களின் ஈடுப்பாடும் பங்களிப்பும் சேர்ந்து இருக்கும் வேளையில் குற்றமில்லா மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் பிபிஎஸ் படை உதவ ‘BPS.COMM.HEL’ எனும் இணையத்தள பயனபாட்டை மாநில முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதன்வழி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட சிறந்த அணுகுமுறை என மேலும் விவரித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ.
பினாங்கு தீவு பகுதியில் பதிவுப்பெற்ற 607 தன்னார்வ ரோந்து படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் நியமித்துள்ள இயக்க செயல்முறை அணுகுமுறையைப் பின்பற்றி செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தன்னார்வ நோந்து படையினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு இக்குழு செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.