பினாங்கு கொம்தாரில் அமைந்துள்ள டோம் தளத்தை புதிய தெக்-டோமாக (Tech Dome) மாற்றியமைக்கும் மேம்பாட்டுத் திட்டத்தை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அடிக்கால்நாட்டு விழாவில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் என மேலும் பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம் சிறு குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படவுள்ளன.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மேம்பாட்டு வேலைகள் நிறைவடையும் எனத் தெரிவித்தார். திறந்த குத்தகை முறையில் “கோக் கொன்ஸ்ட்ரக்ஷன்” நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தெக்-டோம் மூலம் எழுச்சியூட்டும் கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கவும் சிறுவர்களிடையே இருக்கும் பல புத்தாக்கத் திறனை வெளிக்கொனரவும் ஒரு மையக்கால்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர்.
பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த நகரமாக உருவாக்கும் பல அரிய முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பதனை உறுதிச்செய்யும் நோக்கத்தில் மாநில அரசு இத்திட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து அனைத்துலக ரீதியில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தெக்-டோம் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);