பினாங்கு மாநகர் அதிகாரிகளுக்குப் பாராட்டு- மாநில முதல்வர்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம் வழங்கினார்.உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மாநகர் கழக அதிகாரிகளுக்குச் சன்மானம் வழங்கினார்.உடன் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.

கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் திகதி பினாங்கு மாநகர் கழக மூன்று பெண் அதிகாரிகளான சாரினா ஒத்மான், சித்தி அசா அபு பாக்கார், மற்றும் சப்ரீனா முகமது சப்ரி ஆகியோர் நடப்பாதையில் “மைவி” ரக கார் நிறுத்தப்பட்டதை முன்னிட்டு அந்தக் கார் சக்கரத்தைப் பூட்டினர்.
மாநகர் அதிகாரிகளின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட காரின் உரிமையாளர்கள் அம்மூன்று அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். உடனடியாக வாகன உரிமையாளர் சுயமாக கார் சக்கரத்தைத் திறக்க முற்பட்டனர். எனினும் மாநகர் அதிகாரிகள் ரிம50 அபராதம் செலுத்தினால் அக்காரின் சக்கரத்தை திறந்துவிடுவோம் என உறுதியளித்தனர். ஆனால் காரின் உரிமையாளர்களோ அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு அபராத பணத்தையும் கீழே வீசினர். மேலும் மாநகர் அதிகாரிகளை அச்சுறுத்தினர்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளின் தொழில் அணுகுமுறையும் பொறுமையும் கண்டு பாராட்டி சன்மானமாக ரிம200-ஐ வழங்கினார். மேலும், பொது மக்கள் பணியில் ஈடுபடும் அதிகாரிகளிடம் மரியாதைச் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ பண்டார் பத்தாயா பிந்தி இஸ்மாயில், ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);