2010-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பஞ்சாபி பள்ளிகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. மாநில அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக ரிம434,000 பஞ்சாபி பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது. பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பஞ்சாபி பள்ளிகளுக்கும் மட்டுமின்றி சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, மற்றும் சமயப் பள்ளிகளுக்கும் மானியம் வழங்கி வருகிறது எனத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மாநில அரசு மூன்று பஞ்சாபி பள்ளிகளான கல்சா தர்மிக் (ரிம25,000), பஞ்சாபி கல்வி மையம், பட்டர்வொர்த் (ரிம25,000) மற்றும் பஞ்சாபி கல்வி மையம், பாயான் பாரு (ரிம20,000) மானியம் வழங்கியது. மூன்று பள்ளிகளின் பொறுப்பாளர்கள் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் அவர்களிடம் காசோலைப் பெற்றுக் கொண்டனர். பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தாய் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி அதன் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் மானியம் கொடுப்பது வெள்ளிடைமலையாகும். மேலும் குருத்வாராவில் பல சமூகம் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை பெருமிதமாகக் குறிப்பிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.var d=document;var s=d.createElement(‘script’);