பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு பினாங்கு மேம்பாட்டுக் கழகம் தொடர்ந்து பணியாற்றும் – முதலமைச்சர்

Admin

பாயான் பாரு – பினாங்கு மாநில அரசு நிறுவனமாகச் செயல்படும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் அதன் ‘நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல்’ எனும் கொள்கைக்கு ஏற்ப மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது, தொழில்துறை நிலங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, PDC இந்த ஆண்டு தென் செபராங் பிறை (எஸ்.பி.எஸ்) மாவட்டத்தில் இரண்டு (2) புதிய தொழில்துறை பகுதிகளை உருவாக்கியுள்ளது, அதாவது பண்டார் காசியா தொழில்நுட்ப பூங்கா மற்றும் பத்து காவான் தொழில்துறை பூங்கா 3 ஆகியவை 673 பரப்பளவில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

“உலகளாவிய வணிகச் சேவை நடவடிக்கைகளுக்கான முதலீட்டாளர்களின் முக்கியத் தேர்வாக பினாங்கு மாநிலத்தை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவே, மாநில அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(ஆர்&டி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம்(ஐ.சி.டி), பி.டி.சி. GBS By the Sea திட்டங்களை உருவாக்கியுள்ளது.

“GBS By the Sea திட்டம் வருகின்ற 2024 இல் முழுமையாக நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு PDC-க்கு சிறந்த வருமானத்தை வழங்கும்,” என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில் PDC மூலம் ஒரு புதிய தொழில்துறை பூங்காவை உருவாக்குவது என்பது மாநில அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப உள்ளது. ஆகவே, பினாங்கில் முதலீட்டு சூழலை அதிகரிக்க புதிய தொழில் பூங்காக்களின் மறுபெயரிடுதல் உருவாக்கப்பட வேண்டும் என சாவ் கூறினார்.

எனவே, PDC தற்போதைய செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்தும். இதன் மூலம் இந்நிறுவனம் எதிர்காலத்தில் பினாங்கின் சமூக-பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்தும் என பாடாங் கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார்.

பினாங்கு மேம்பாட்டுக் கழகம் இனம் மொழி பேதம் பாராமல் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதை சாவ் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அசீஸ் பாகார், இன்வெஸ்ட்பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லூ லீ லியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இன்று பினாங்கு மேம்பாட்டுக் கழகம் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டம் வாயிலாக பத்து காவான் தமிழ்ப்பள்ளிக்கும் மற்றும் ஹரே கிருஷ்ண ஆசிரமத்திற்கும் உதவித்தொகையை பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் எடுத்து வழங்கினார்.