பினாங்கு மாநில வரவுச்செலவுத் திட்டம் 2016

 2016-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையுடன்  மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் இரண்டாம் துணை முதல்வர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.
2016-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் இரண்டாம் துணை முதல்வர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.

பினாங்கு மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 6 நவம்பர் 2015-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அடுத்தாண்டிற்கானக் கருப்பொருள் “நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொண்ட பினாங்கு மாநிலம்” ஆகும். இத்திட்டத்தில் மாநில வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் மற்றும் சமூக பொருளாதார மேன்மை ஆகிய மூன்று முக்கிய கூறுகள் உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரவுச்செலவுத் திட்டம் மாநில வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக அமல்படுத்தி வருமானத்தை பெருக்கி அதில் மக்களும் பயனடைய வேண்டும் என்பதாகும். 2016-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிர்வாகத் திட்டத்திற்கு ரிம979,526,843 லட்சம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம346,123,190 லட்சம் என மொத்தமாக ரிம RM1,105.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரை கூடுதல் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2014-ஆம் ஆண்டு கணக்குப்படி மாநில சேமிப்பு நிதியத்தில் ரிம880.75 லட்சம் உள்ளது.

2016 வரவுச்செலவுத் திட்டம் ஒரு கண்ணோட்டம்:

பொருளாதாரம்
சமத்துவப் பொருளாதாரத் திட்டம் (AES)
மாதாந்திர குடும்ப வருமானம் ரிம 790ஆக நிர்ணயிக்கப்படுகிறது
தங்கத் திட்டத்திற்கு ரிம61 மில்லியன் ஒதுக்கீடு
தங்க குழந்தை ரிம 200
தங்க மூத்த குடிமக்கள், தனித்துவாழும் தாய்மார்கள், ஊனமுற்றோர் என தலா ரிம 100
தங்க முதியோர் இறப்பு சடங்கிற்கு ரிம1,000
முழு நேர தங்கத் தாய் திட்டம் ரிம 100
பினாங்கு மாநில இலவச இணைய சேவை
மாநில அரசு பினாங்கு முழுவதிலும் 3,100 ஹொட்ஸ்போட் கருவிப் பொருத்தப்படுவதோடு அதன் வேகத்தை அதிகரிக்க திட்டம் வகுத்துள்ளது. 50 ஹொட்ஸ்போட் கருவி ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இச்சேவைக்கான செலவிற்கு 5 ஆண்டு காலக்கட்டத்தில் ரிம10மில்லியன் செலுத்தப்படும்.

குற்றத் தடுப்பு
மாநில அரசு புதிய இரகசியக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும் பழைய மேமராக்கள் பாரமரிப்பதற்கும் பினாங்கு மாநகர் கழகத்தின் மூலம் ரிம9.36லட்சம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் மூலம் ரிம3லட்சம் ஒதுக்கியுள்ளது.
சமூக முன்னேற்ற மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தன்னார்வ ரோந்து படை அமைக்க ரிம1.2 லட்சம் ஒதுக்கீடு
மனித மூலதன மேம்பாடு.
ஜெர்மனி இரட்டை தொழிற்பயிற்சி திட்டத்திற்கு ரிம2 லட்சம் ஒதுக்கீடு. மாணவர்கள் டிப்ளோமா கற்பதற்குக் கூடுதல் ஊக்குவிப்புத் தொகையாக மாதந்தோறும் ரிம900 வழங்கப்படும். இத்திட்டத்திற்கு கூடுதலாக ரிம4 முதல் ரிம6 லட்சம் ஒதுக்கப்படும்.
“பினாங்கு மாநில எதிர்கால அறக்கட்டளை” அமைக்கப்பட்டு ரிம20 லட்சம் ஒதுக்கீடு. திறமை மிக்க மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குதல்.
அறிவியல் & தொழில்நுட்பம் பிரதிபலிக்கும் தெக் டோம் ரிம25 லட்ச செலவில் நிர்மாணிக்கப்படும்.

பெண்கள் மேம்பாடு
“முன்னேறுவது” எனும் பெண்கள் முன்னேற்ற திட்டத்தை வழிநடத்த பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு ரிம1.5 லட்சம் மற்றும் சட்டமன்ற சேவை மையம், சமூக முன்னெற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்திற்கு ரிம800,000 ஒதுக்கீடு.
இதுவரை இத்திட்டத்தில் பினாங்கு மாநில ஐந்து மாவட்டங்களில் ஏறக்குறைய 297உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாடு
மலேசிய மாஸ்டர் பூப்பந்து போட்டி 2016, உலக இளைஞர் போட்டி 2016, மற்றும் பல அனைத்துலக போட்டிகளை பினாங்கு மாநிலம் ஏற்று நடத்துவதால் ரிம5 லட்சம் ஒதுக்கீடு. மாநில அரசு பினாங்கு நீர் வாரியத்துடன் இணைந்து பினாங்கு காற்பந்து குழுவினருக்கு ரிம12.34 லட்சம் மானியம் வழங்கியது.

அரசு ஊழியர்களுக்கு போனஸ்

2015-ஆம் ஆண்டுக்கான மற்றோறு அரைமாத போனஸ் டிசம்பர் மாதம் வழங்கப்படும். குறைந்தபட்சம் ரிம700-ஐ பெறுவர். காபா (kafa) கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் ரிம300-ம் இஸ்லாம் பாலர்ப்பள்ளி ஆசிரியர்கள் ரிம200 பெறுவர்.
கடந்த ஜூலை மாதம், நோண்புப் பெருநாளை முன்னிட்டு 4168 அரசு ஊழியர்களுக்கு ரிம5.22 லட்சம் ஒதுக்கீட்டில் அரை மாத போனஸ் வழங்கப்பட்டன.
2015-ஆம் ஆண்டு மாநில அரசு 1 மாத போனஸ் வழங்கியுள்ளது.

மதிப்பீட்டு வரி விலக்கு
பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் மதிப்பீட்டு வரி விலக்கு
மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடமைப்புக் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரிம 11,494,135.12 ஒதுக்கீடு.
மேலும், இவ்விரு கழகங்களும் பொது மக்களுக்கு பொருள் சேவை வரி விலக்கு வழங்கியுள்ளது.

மலிவு விலை வீடமைப்புத் திட்டம்
மாநில அரசகைந்து மாவட்டங்களிலும் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ள பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்கு ரிம500 லட்சம் வழங்கியுள்ளது.
முதல் கட்டமாக பண்டார் காசியாவில் 520 யூனிட் மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டு ரிம72,500 மற்றும் ரிம220,000 விலையில் விற்கப்படும்.
மாநில அரசின் ” 1 குடும்பத்திற்கு 1 வீடு” என்ற கோட்பாட்டில் அதிகபட்ச விலையாக ரிம150,000 விற்கப்படும், ஆனால் ரிம6,000-க்கும் குறைவான வருமானம் பெருநராக இருத்தல் வேண்டும்