தென்கிழக்கு ஆசியா செமிகோன் சீ 2016 (SEMICON SEA) மீண்டும் பினாங்கு மாநில ஸ்பாய்ஸ் அரேனா அரங்கத்தில் நடைபெறுவதை பெருமிதமாகக் கொள்வதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இந்நிகழ்வு தென்கிழக்கு ஆசியா வட்டாரத்தில் நடைபெறும் ஒரே வர்த்தக மற்றும் தொழில்நுட்ப விழா என வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இவ்விழா நுண்மின்னியல் சுற்றுச்சூழல் உற்பத்தி, பொருட்கள் தயாரிப்பு, ஆராய்ச்சி செய்தல் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் அனைத்தும் சித்தரிக்கும் தளமாக அமைகிறது. பினாங்கு மாநில முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாகத் திகழும் ‘முதலீடு பினாங்கு'(Invest Penang) செமிகோன் சீ 2016 நிகழ்வின் துணை ஏற்பாட்டுக் குழுவினராகத் திகழ்வதோடு எதிர்காலத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளவிருக்கின்றன.
* பெருநிறுவன தலைவர்களுக்கு வலைபின்னல் பிரமுகர் விருந்தோம்பல் நிகழ்வு
*புதிய கண்டுப்பிடிப்பு மையம் @ கேட் விஸ்மா இயாப் சோர் ஈ. அனுபவமிக்க நிறுவன தொழிலாளர்களுடன் உள்ளூர் தொழிலாளர்கள் ஒன்றுக்கூடும் தளம் உருவாகுதல்.
* “தலைமை நிர்வாக அதிகாரி பேசுகிறார் …” சிறந்த அனைத்துலக பேச்சாளர்கள் கொண்டு வந்து “IoT” சம்பந்தமான உற்பத்தி மேம்படுத்துதல்
* “SEMICON U at @CAT” மாணவர்களுக்குக் கூடுதல் ஊக்குவிப்பு மற்றும் வாய்ப்பு வழங்கி தொழில்நுட்பம் துறையில் ஈடுப்படுத்துதல்
2015-ஆம் ஆண்டு மலேசியாவிலே பினாங்கு மாநில “வெளிநாட்டு நேரடி முதலீட்டில்” 20% கூடுதல் பங்களிப்பு வழங்கியுள்ளது.தொழிற்துறை முதலீட்டுக்கு பினாங்கு மாநில முக்கியத் தளமாக விளங்கிறது. பினாங்கு மாநிலத்தில் 40 அரசு மற்றும் தனியார் சார்ந்த பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் தொழிற்துறையில் திறமையானத் தொழிலாளர்கள் உருவாகுவர்.
40 ஆண்டுகால தொழிற்துறை அனுபவத்தில், பினாங்கு மாநிலம் திறமையான தொழிற்படை, அறிவுச்சார்ந்த சொத்து பாதுகாப்பு சட்டத்திட்டங்கள், தூய்மையான நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம், மற்றும் உற்பத்தி துறையை இணைக்கும் வண்ணம் 300 பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுச் செய்துள்ளன.var d=document;var s=d.createElement(‘script’);