பாகான் – பட்டர்வொர்த் மாக் மண்டின் பி.பி.ஆர் பொது வீடமைப்புத் திட்டத்தில் மேற்கூரை சேதமடைந்தது. இது பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ ஈ கின் கவனத்திற்கு எட்டிய பின்னர் பினாங்கு 80:20 வீட்டுவசதி பராமரிப்பு நிதியத்தின் வாயிலாக பழுதுபார்க்கப்பட்டது.
அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பழுதுபார்க்கும் பணிகளுக்காக மொத்தம் ரிம85,000 செலவிடப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு மற்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை சம்பந்தப்பட்ட மாக் மண்டின் பி.பி.ஆர் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று, மேற்கூறிய திட்டத்திற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த விண்ணப்பம் அக்டோபரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இந்த ஆண்டு பிப்ரவரியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு 2 மாதங்களில் முடிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு ரிம80,000 செலவாகும் என்பதால், பினாங்கு வீட்டுப் பராமரிப்பு நிதியம் வாயிலாக ரிம68,640 (80%), மீதமுள்ள 20% அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு மேலாண்மை அமைப்பு 20%-மும் மீதமுள்ள ரிம17,160 ஐ சட்டமன்ற உறுப்பினர் சீ வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சேதமடைந்த மேற்கூரைகள் மட்டுமின்றி, ஐந்து யூனிட்களில் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழைநீர் நுழையும். இத்திட்டம் மற்றும் இத்திட்டத்தின் பழுதுபார்க்கும் பணியினை தொடர்ந்து, இந்த ஐந்து யூனிட்களில் இருந்த பிரச்னைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.”
2008 ஆம் ஆண்டு பினாங்கு வீட்டு பராமரிப்பு நிதியம் 80:20 அறிமுகப்படுத்தியதில் இருந்து, மாநில அரசு 36,652 பராமரிப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சுட்டிக்காட்டினார். அவை பொது மற்றும் தனியார் வீடமைப்புகளின் பராமரிப்பு சுமையை குறைக்கிறது.
“பாகான் பகுதியில் மட்டும், ரிம3.38978 மில்லியன் ஒதுக்கீட்டில் மொத்தம் 31 பராமரிப்புத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதில் ரிம1.23 மில்லியன் பாகான் ஜெர்மாவில் அமைந்துள்ளது பொது வீடமைப்புத் திட்டங்களாகும்.”
10 ஆண்டுகளுக்கும் மேலான மாக் மண்டின் பி.பி.ஆர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உதவுவதற்கு இந்த நிதி முன்னுரிமை அளித்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், அவர் அப்போதைய முதலமைச்சராக இருந்தபோது பராமரிப்பு நிதி தொடங்கப்பட்டதாகவும், மாநிலத்தில் உள்ள பல பி.பி.ஆர் குடியிருப்பாளர்களுக்குப் பலனளித்துள்ளது என்றார்.
இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலர் 4 ரிங்கிட் 31 சென் வரை உயர்ந்துள்ளது. எனினும் நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சியை மக்கள் இன்னும் உணரவில்லை என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறினார். நாட்டின் வலுவான பொருளாதார நிலைதன்மையால் அதிக பலன்கள் வரவுள்ளன.
இதற்காக, நமது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு செவிசாய்ப்பதிலும் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார். மேலிருந்து கீழாக பல்வேறு துறைகளில், மக்கள் பயன்பெறும் வகையில், நம் நாடு சரியான பாதையில் செல்வதாக தாம் உணர்வதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் செயல்திட்டங்கள் மீது மக்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் வழங்க வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார.
ஏனெனில் நல்ல பொருளாதாரப் வளர்ச்சியில் மக்கள் உண்மையிலேயே பயனடைய முடியும் என குவான் எங் வலியுறுத்தினார்.