சிங்கப்பூரில் கடந்த 5 ஜுன் முதல் 16 ஜுன் வரை நடந்து முடிந்த 28-வது சீ போட்டி விளையாட்டில் பினாங்கு மாநில விளையாட்டாளர்கள் தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றிவாகைச் சூடியுள்ளனர். இவர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு பினாங்கு விளையாட்டு வெற்றி திட்டத்தின் கீழ் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தது. இந்நிகழ்வு கொம்தாரில் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் பினாங்கு மாநிலத்திலிருந்து 65 விளையாட்டாளர்கள் 24 விதமான போட்டி விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். இதில் 13 பினாங்கு விளையாட்டாளர்கள் 15 தங்கம் வென்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இவர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் பொருட்டு மாநில அரசு தங்கம் வென்ற அனைத்து விளையாட்டாளர்களுக்கும் ரிம51,000-ஐ ஊக்கத்தொகையாக வழங்கியது பாராட்டக்குறியதாகும். இந்த ஊக்கத்தொகை பினாங்கு விளையாட்டாளர்களுக்கு ஊன்றுகோலாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்குவாஷ் போட்டி இரட்டையர் பிரிவில் பினாங்கை சேர்ந்த வனிஷா ராஜ் த/பெ கானசிகாமணி என்ற விளையாட்டாளர் தங்கம் வென்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. வரும் காலங்களில் வெற்றி வாகைச் சூட இன்னும் அதிகமான பயிற்சிகள் செய்யவிருப்பதாகக் கூறினார். ஊக்கத்தொகை வழங்கி வெற்றியை கௌரவித்த மாநில அரசுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் அவர்களும் கலந்து கொண்டு விளையாட்டாளர்களைப் பாராட்டினார்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);