பிரிமா வீடமைப்புத் திட்டம் பினாங்கில் விரைவில் கட்டப்படும் என்றும் அவ்வீடுகளுக்கு 20% கழிவு வழங்கப்படவுள்ளதாக ‘Malay daily’ நாளிதழில் வெளியிட்ட செய்தியை வன்மையாகச் சாடினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. சுங்கை ஆரா / பாயான் பெலாஸ், மற்றும் பாலேக் புலாவ் பகுதிகளின் சந்தை விலைக்கு ஏற்ப பிரிமா வீட்டு விலைகள் இல்லை; எனவே, அவ்வீட்டு விலை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பினாங்கு மாநில மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைக் குறைப்பதற்கு மாநில அரசு புதிய முயற்சிகளைக் கையாளவிருப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
மாநில அரசின் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் தேர்வுச் செய்யும் விரிவாக்கக் குழுவினருக்கு “தேசிய வங்கி மத்திய கடன் குறிப்பிடல் தகவல் அமைப்பு” (CCRIS) மூலம் தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் அடையாளம் காண உதவ வேண்டும். இதன்வழி குழுவினரால் விண்ணப்பங்கள் அங்கீகரிப்பதற்கு முன் பூர்வாங்க மதிப்பீட்டில் விண்ணப்பங்கள் நிராகரிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
மேலும் 20/2/2016 -ஆம் நாள் வரை 35,229 விண்ணப்பங்கள் மலிவு விலை வீடுகள் பெறும் காத்திருக்கும் பட்டியலில் இடம்பெறுவதாக திரு ஜெக்டிப் தெரிவித்தார். “கடன் நிராகரிப்பு, முன் பணம் செலுத்த இயலாமை, கூடுதல் தொகுப்புகள் மற்றும் பொருத்தமற்ற இடம்” ஆகிய காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
கடந்த 2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரை 27,975 யூனிட் மலிவு விலை வீடு விண்ணப்பங்கள் அங்கீகரிப்பட்டுள்ளன. இதனிடையே, இவ்வாண்டு மார்ச் மாதம் வரை சுமார் 3,214 விண்ணபதாரர்கள் வீடுகள் பெற அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தேர்வுச் செய்யும் விரிவாக்கக் குழுவினர் ரிம300,000-கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த, நடுத்தர மற்றும் மலிவு விலை வீடுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குகின்றன