பிறை குடியிருப்பாளர்கள் மத்தியில் பசுமையான இல்லம் காண்போம் பிரச்சாரம் தாமான் சாய் லேங் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்றக் கழகம், செபராங் பிறை நகராண்மைக் கழகம், பினாங்கு பசுமைக் கழகம், செபராங் பிறை சுகாதார துறை ஆகியோரின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் சுத்தமான சுகாதாரமான பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கத்தில் பசுமையான இல்லம் காண்போம் எனும் பிரச்சாரம் துவக்கப்பட்டதாகக் கூறினார். பொதுமக்கள் வீட்டு வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தும் வகையில் பசுமையான இல்ல பிரச்சாரம் அவ்வட்டார மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது சாலச்சிறந்தது. இதன்வழி, பரவுவரும் டிங்கி காய்ச்சல் அபாயத்திலிருந்து பொதுமக்களை காப்பற்ற முடியும் என மேலும் கூறினார்.
பசுமை இல்லப் பிரச்சாரத்தின் போது ஜாலான் பாவாலில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதோடு, வீட்டில் பயன்படுத்தப்படாத அல்லது பழுதான மின்சார பொருட்கள் அகற்றும் பிரச்சாரமும் ஆரம்பமானது. இதனிடையே, சமூக சேவையில் இளைஞர்களின் பங்கினை அதிகரிக்கும் நோக்கத்தில் COMBI திட்டத்தில் உறுப்பினர் நியமனச் சான்றிதழை தாமான் இண்ராவாசே இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான ப.இராமசாமி.
இந்நிகழ்வில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி. கஸ்தூரி பட்டு, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு சத்தீஸ் மினியாண்டி மற்றும் திரு டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.} else {