பத்து கவான் நாடாளுமன்ற தொகுதி ஏற்பாட்டில் புதிய வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவு தொகுதி மாற்ற பிரச்சாரம் கம்போங் ஜூருவில் அமைந்துள்ள பொது சந்தை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு தேர்தல் ஆணைய ஆதரவோடு நடைபெற்றது.
இந்த வாக்காளர் பதிவு நிகழ்வில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, இதன் மூலம் வரும் பொதுத் தேர்தலில் அவர்கள் வாக்களிப்பதை உறுதிச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு தெரிவித்தார். இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினராகத் திகழும் கஸ்தூரிராணி பட்டு இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமின்றி பொருளாதாரத்தின் ஊன்றுக்கோள் எனக் கூறினார்.
இப்பிரச்சாரத்தில் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வாக்காளர்களாகப் பதிவுச் செய்தனர். தொடர்ந்து, ஆகஸ்டு மாத இறுதியில் மீண்டும் வாக்காளர் பதிவுப் பிரச்சாரம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். பொது மக்கள் இந்தப் பிரச்சாரம் வெற்றிப்பெற நல்ஆதரவு வழங்க வேண்டும்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);