புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் திறப்பு விழாக் கண்டது.

Admin

பினாங்கு ரேபிட் பேருந்து சேவையும் மாநில அரசும் இணைந்து புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடத்தைத்(New Weld Quay Terminal) திறந்து வைத்தனர். இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு லிம் குவான் அவர்கள். 20,000-க்கும் மேற்ப்பட்ட உள்ளூர் பயணிகள் மற்றும் சுற்றுப்பயணிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கடந்த ஜுன் 2013-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் இப்புதிய பேருந்து நிறுத்துமிட திட்டம் பினாங்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் ரிம 27 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றார். பொதுமக்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த தூண்டு

படம் 1: புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடத்தைத்(New Weld Quay Terminal) திறந்து வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் இதர பிரமுகர்கள்.
படம் 1: புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடத்தைத்(New Weld Quay Terminal) திறந்து வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் இதர பிரமுகர்கள்.

தலாகவும் சாலையில் வாகன போக்குவரத்தை குறைக்கும் நோக்கத்தில் இப்புதிய கட்டிடம் CMI நிலத்தில் 3515 சதுரங்க பரப்பளவில் 12 பேருந்துக்கள் ஒரே நேரத்தில் பயணங்களை தொடரும் நிலையில் நிறுவப்பட்டுள்ளது. பினாங்கில் 17 பேருந்துகள் பாலம் போக்குவரத்து எக்ஸ்பிரஸ் (bridge express shuttle transit) எனும் சேவையை செபெராங் பிறையிருந்து பாயான் பாரு வரையும் மற்றொரு சேவையான மையப்பகுதி போக்குவரத்து சேவைக்காக (central area transit) 5 பேருந்துகளையும் சிறப்பு இலவச சேவையாக பொதுமக்களுக்கு வழங்குகிறது. இதற்காக பினாங்கு மாநில அரசு ஒவ்வொரு மாதமும் ரிம் 239,00-ஐ செலவிடுவது பாராட்டக்குறியதாகும்.

இந்நிகழ்வில் ரேபிட் பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் முகமது சுக்ரி அவர்கள் பினாங்கு மாநில அரசுவிற்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். 17 டிசம்பர் தொடங்கி 5 பாதைகளுக்கு இப்புதிய பேருந்துகள் நிறுத்துமிடத்திலிருந்து சேவையை வழங்கும்.

*பாதை 101: வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் – தஞ்சோங் பூங்கா

*பாதை 10: வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் – போதனிக்கல் பூங்கா

*பாதை 11: வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் – பத்து லஞ்சாங்

*பாதை 12: வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் – பண்டார் ஸ்ரி பினாங் மற்றும் ஐந்தாவது பாதை மையப்பகுதி போக்குவரத்து சேவை (central area transit) 5 பேருந்துகள் செயல்ப்படும்.

இந்நிகழ்வில் பினாங்கு நகராண்மை கழகம் அதிகாரி டத்தோ பத்தாயா இஸ்மாயில், ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

படம் 2: புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம்
படம் 2: புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம்