16 நாட்கள் சர்வதேச ரீதியில் பெண்களுக்கு எதிரான பாலின வன்முறையை நிறுத்தும் நடவடிக்கையை முன்னிட்டு , பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் “ பினாங்கு கோஸ் ஆரஞ்சு” என்ற பிரச்சார நடவடிக்கை அனுசரித்தது.
“பினாங்கு கோஸ் ஆரஞ்சு” கருப்பொருளை ஊக்குவிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி விழிப்புணர்வுப் பெற ஐக்கிய நாட்டு அமைப்புகள் ஒவ்வொர் மாதமும் 25-ஆம் திகதி ஆரஞ்சு நாளாக அனுசரித்துள்ளது . “பினாங்கு கோஸ் ஆரஞ்சு” பிரச்சாரத்தில் பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் ((WCC), “Child Rising” , பினாங்கு சீன டவுன் ஹால் (Penang Chinese Town Hall), “வாபா”(WABA), ஆகியோரிகளின் ஆதரவிலும் நாடளுமன்ற , சட்டமன்ற சேவை மையங்கள், பினாங்கு மாநில சமூக நல இலாக்கா மற்றும் மாநில அரசாங்க ஒற்றுழைப்பிலும் இனிதே நடைபெற்றது.
கடந்த 3 வாரங்களாக பினாங்கு மற்றும் செபெராங் பிறையில் பல நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் பொது சந்திப்புகள் நடைபெற்றன. இப்பிரச்சாரத்தின் வழி பல்லின மக்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் நடவடிக்கையைப் பற்றிய முக்கியத்துவம் அறியப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. கடந்த 23ஆம் தேதி நவம்பர் 2014, பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பட்டறை ( சீன மொழியில்) பினாங்கு சீன டவுன் ஹாலிலும் மற்றும் அதே நாளில் குடும்ப வன்முறை என்ற தலைப்பில் (தமிழ் மொழியில்) தம்பூன் கார்டன் உணவகத்திலும் நடைபெற்றது. 28-ஆம் தேதி நவம்பர் மாதம் “உண்மை கதை சொல்லுதல்” (VOICES) ஆங்கிலத்தில், பினாங்கு ஜார்ஜ்டவுன் கலை விழாவில் நடைபெற்றது. இறுதியாக 29ஆம் தேதி குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பை நிறுத்தும் பட்டறை “SCAN” (மலாய் மொழியில்) கம்போங் மலாயுப் பிளாட், ஆயிர் ஈத்தாமில் நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இந்தப் பிரச்சாரத்தில் இடம்பெற்ற முக்கிய அங்கமாகும்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பின் , மதிப்பீட்டின்படி மூன்றில் 1 பெண்கள் தனது வாழ்நாளில், தனது நெருக்கமான அன்பர்களால் பாலியல் பலாக்காரத்துக்குத் தாக்கப்படுகின்றனர்.. மலேசிய புள்ளி விவரப்படி 2000-ஆம் ஆண்டு தொடங்கி இருந்து 2010-ஆம் ஆண்டு வரை 35,684 குடும்ப வன்முறைகள் , 25,363 கற்பழிப்பு மற்றும் 19,465 பாலின தொல்லைகள் பதிவாகியுள்ளன .
கடந்த 11 டிசம்பர் 2014, ““பினாங்கு கோஸ் ஆரஞ்சு” பிராச்சார நிறைவு விழாவில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து கொண்டார். பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தினரின் இந்த அரிய முயற்சியினைப் பாராட்டினார். இந்நிகழ்வில் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினரான சொங் எங் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், மாநில முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் இணைந்து “பினாங்கு கோஸ் ஆரஞ்சு” பிரச்சார ஆதரவாளர்களுக்கு நற்சான்றதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் .
மொழிப்பெயர்ப்பு : இன்பஜோதி ( PWDC )