கடந்த டிசம்பர் மாதம், பினாங்கு மாநகர் கழகம் ஜாலான் அசிஸ் பொது திடலில் பொருத்திய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகள் பொறுப்பற்ற தரப்பினரால் சேதமடைந்ததை சுங்கை நிபோங் சந்தாய் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகம் மாநகர் கழக பார்வைக்குக் கொண்டு சென்றனர். இந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகள் ரிம10,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டது எனத் தெரிவித்தார் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன். 2 மாத காலக்கட்டத்தில் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கையால் பொது வசதிகள் மற்றும் கருவிகள் சேதமடைவதைத் தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார்.
பொது மக்கள் பொது வசதிகளை நன்கு பயன்படுத்துவதோடு பாதுகாக்க வேண்டும், ஏனெனில் மாநில அரசு வரிப் பணம்(மக்கள் பணம்) பயன்படுத்தியே பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்கின்றனர் என்பதை பலர் உணர மறுக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டினார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதல் பொது சொத்துடைமைகளைப் பாதுக்காக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் அரசு நிர்மாணிக்கும் பொது வசதிகளை சில பொறுப்பற்ற தரப்பினர்கள் சேதப்படுத்துவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
பொது வசதிகள் மற்றும் கருவிகளைச் சேதப்படுத்தும் தரப்பினரைப் பார்த்தால் உடனடியாக பினாங்கு மாநகர் கழகம் அல்லது காவல் துறையினரை 04-2637000/ 2637637 எனும் எண்ணில் தொடர்ப்புக் கொள்ளவும்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);