மகளிர்களுக்கு உதவ மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி திட்டம்

Admin
img 20240709 wa0068

பிறை – பிறை எம்.பி.கே.கே மற்றும் பிறை சேவை மையத்தின் ஏற்பாட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

 

இத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த திட்டங்களை பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் மகளிருக்கான மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

 

இந்த 12 வாரப் பயிற்சியில் பிரசவத்திற்குப் பிந்தைய தாய், சேய் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு கற்றுதரப்படும்.

 

இதனிடையே, இந்த பயிற்சி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதன்வழி தாய்மார்கள், குழந்தைகளின்  பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வழிவகுக்கும்.

 

இங்குள்ள பிறை சட்டமன்ற சேவை மையத்தில் காலை 9.30 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில்   10 மகளிர் பங்குபெற்று பயனடைந்தனர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய பயிற்சியை வழங்குவதற்கும் அதன் மூலம் உபரி வருமானம் பெறுவதற்கும் இந்த பயிற்சி துணைபுரியும் என்று ஸ்ரீ நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

மேலும், இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவதற்கு தங்களுக்குத் பெரிதும் துணை புரிந்த மலேசிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கும் ஸ்ரீ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

img 20240709 wa0072

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை கல்ந்து கொண்டு ஆதரவு நல்கினார்.

 

பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் தையல் பயிற்சி பட்டறை, கைவினை மற்றும் சமையல் பட்டறை ஆகியவை மகளிர்களின் வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

img 20240709 wa0070