ஜார்ச்டவுன் : பினாங்கு மாநில அரசு மக்கள் நலன், சமூகவியல் திட்டத்தை முன்வைத்து 2021 ஆம் ஆண்டுக்காண பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தை சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.
முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், 2021 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ரிம403.80 மில்லியனுக்கான பற்றாக்குறை நிதியானது மொத்த மானியங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் வாயிலாக ரிம532 மில்லியன் பங்களிக்கப்படுவதாகக் கூறினார்.
“2021 வரவு செலவு திட்டத்தில் இந்த மிகப் பெரிய நிதி ஒதிக்கீடு செய்யவில்லை என்றால் மாநில அரசால் கூடுதலான வரவுசெலவை தாக்கல் செய்ய முடியும்.
“எனவே, இந்த கோவிட்-19 தாக்கத்தின் நெருக்கடியான தருணத்தில் பொது மக்களின் சமூகநலன் பாதுகாப்பதில் மாநில அரசு கொண்ட உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது,” என்று 14 வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையில் அவர் இவ்வாறு கூறினார்.
வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை குறைப்பதற்கான மாநில அரசின் அர்ப்பணிப்பு குறித்து புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக் மற்றும் செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹாருடின் ஆகியோரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் இவ்வாறு கூறினார்.
மேலும் கொன் யாவ் கூறுகையில், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பற்றாக்குறை கொண்ட வரவுசெலவுத் திட்டத்தையே முன்வைக்கிறது. இருப்பினும் 2018ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் கூடுதலான வரவுசெலவு கணக்கே இறுதியில் சமர்ப்பிக்கப்படுகிறது.
“2021 ஆம் ஆண்டில் கூடுதல் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க மாநில அரசுக்கு விருப்பம் இருந்தாலும், இந்த மாநிலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவுச்செய்வதில் உறுதிப்பூண்டு செயல்படுகிறது.
முன்னதாக வரவுசெலவு திட்டத்தில் இந்த ஆண்டு நிர்வாக செலவினங்களுக்கு ரிம909.82 மில்லியன் ஒதுக்கப்பட்ட வேளையில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரிம294,106,207 நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு வரவு செலவில் ரிம506.02 மில்லியன் வருமானமாகவும், அதேவேளையில் ரிம403.80 மில்லியன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதாவது ரிம273.5 மில்லியன் கூடுதலாகும் என முதல்வர் தெரிவித்தார்.