“மடிவேன் ஆனால் மண்டியிடமாட்டேன்” என மாநில முதல்வர் லிம் குவான் எங் மாநகர் கழக அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு நாள் இரவு முழுவதும் தன்னை தடுப்புக் காவலில் வைத்திருந்தாலும் இந்நாட்டில் மேற்கொள்ளும் ஊழலுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பேன் என முதல்வர் கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் 2 ஊழல் குற்றசாட்டுகள் புரிந்ததாக 29/6/2016 அன்று கைதுச் செய்தது. ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தை தலைமையேர்த்த போது தனது அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டார். சந்தை விலை காட்டிலும் மிக குறைவான விலையில் பங்களா வீடு கொள்முதல் மற்றும் அந்நிய தொழிலாளர் வீடமைப்புத் திட்டம் அனுமதி குறித்து முதல்வர் மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குவான் எங் வீட்டு கொள்முதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பங்களா வீட்டு உரிமையாளரான பாங் லீ கூன் பினாங்கு கார்டன் கட்டடிடத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டார்.
பினாங்கு ஊழல் தடுப்பு ஆணைய காவலில் வைக்கப்பட்ட மாநில முதல்வரும் அயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான குவான் எங் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் ஊழல் ஆணைய கட்டிடத்தின் முன்புறம் கூடினர்.
மறுநாள் மாநில முதல்வரின் ஊழல் தொடர்பான வழக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களாக பூஞ்சோங் நடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங், நேதாஜி இராயர்(ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் ராம் கர்ப்பால் (புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர்) நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அதே வேளையில் பாங் லீ கூன் சார்பாக வழக்கறிஞர் குமரேந்திரன் மற்றும் டேவ்குமார் குமரேந்திரன் ஆஜராகினர்.
நீதிபதி டத்தோ அஸ்மி அரிப்பின் முன்னிலையில் வழக்கு விசாரனை வாசிக்கப்பட்டதுடன் வழக்கை உயர் நீதிமன்றம் 3-க்கு கொண்டுச் செல்லுமாறு ஆணையிட்டார். ஊழல் தடுப்பு சட்டம் செக்ஷன் 23 மற்றும் செக்ஷன் 165 கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. அதோடு பாங் லீ கூன் மீது செக்ஷன் 109 கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்து வழக்கு மேல் விசாரணை தொடருமாறுக் கேட்டுக் கொண்டார். இறுதியில் முதல்வர் 1 மில்லியன் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பங்களா வீட்டு கொள்முதல் வீட்டு உரிமையாளரான பாங் லீ கூன் விருப்பத்துடன் இடம்பெற்றது, ஆனால் இந்த விவகாரத்தை தாமான் மங்கீஸ் நில விற்பனையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. இருப்பினும் முதல்வரின் குற்றச்சாட்டு பத்திரிக்கையில் தாமான் மங்கீஸ் நில கொள்முதல் பற்றி குறிப்பிடாதது தேசிய முன்னணி அமைச்சரின் பொய்யுரை அம்பலமாகியுள்ளது.
என் மீது சுமத்தப்பட்ட 2 குற்றச்சாட்டுகளும் அரசியல் அடக்குமுறை மற்றும் முதல்வர் பதவியை அபகரிக்கும் முயற்சியாகும் என்றார். பொது மக்கள் ஊழல் தடுப்பு ஆணையம் மட்டுமின்றி பினாங்கு உயர் நீதிமன்ற முன்னிலையிலும் கூடி தங்களின் ஒருமைப்பட்டினையும் முதல்வரின் ஆட்சி மீது கொண்ட நம்பிக்கையும் சித்தரிக்கிறது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நிபந்தனை பேரில் விடுக்கப்பட்டார்.