பினாங்கு மாநிலத்தின் பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் கீழ் அமல்படுத்திய மலிவு விலை வீட்டுத் திட்டம் மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது. மலிவு விலை வீடுகள் வாங்கும் திட்டத்தில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பப்பாரங்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை மலிவு விலை வீடுகளுக்கு 25,065 விண்ணப்பமும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு 24,283 விண்ணப்பமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்கள். இத்திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்று கொண்ட பெறுநர்களில் சிலர் தங்களின் வீட்டை வாடகைக்கு விடுவதை கடுமையாகச் சாடினார் திரு ஜெக்டிப்.
பினாங்கு மாநிலத்தில் மலிவு விலை வீடுகளை வாங்குவதற்கு அதிகமானோர் காத்திருப்பதாகவும் கிடைக்கப் பெற்ற சிலர் அதனை வாடகைக்கு விடுவது தவறு எனச் சுட்டிக்காட்டினார். திரு.ஜெக்டிப் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இத்தகவல் அம்பலமானது. சம்மந்தப்பட்ட தரப்பினர் மீது மோசடி குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 420-இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டவிருப்பதோடு அவர்களின் வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என விவரித்தார். ஏனெனில், PN1 விண்ணப்பாரத்தில் கோட்பாடுகள் தெளிவாக அடையாளமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது ‘Saya juga berjanji bahawa saya dan keluarga akan menduduki unit yang diperuntukkan itu. Sekiranya didapati saya dan keluarga tidak menduduki unit yang diperuntukkan itu tanpa apa-apa sebab munasabah atau disewa/diduduki orang lain, maka Bahagian Perumahan, Pejabat Setiausaha Kerajaan berhak membatalkan tawaran dan menarik balik unit yang diperuntukkan tanpa membayar sebarang gantirugi’ என்ற விதிமுறை தெளிவாக பதிவு பெற்றுள்ளதால் இதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவிருப்பதை சுட்டிக் காட்டினார். அதோடு, மலேசிய எஸ்டேட் முகவர் நிறுவனத்திடம் (Malaysian Institute of Estate Agents) பினாங்கு மாநில மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை வாடகைக்கு விடும் விளம்பரங்களை தவிர்க்குமாறு பரிந்துரைத்துள்ளார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.var d=document;var s=d.createElement(‘script’);