மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் 15-வது ஆண்டு பொதுக்கூட்டம்.

அண்மையில் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் ஆண்டு பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்றது. 15-வது முறையாக நடத்தப்பட்ட இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தை பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர்  முனியாண்டி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர் கழக உறுப்பினரும் இந்து அறப்பணி வாரிய ஆணையருமான காளியப்பன் மற்றும் இந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஆண்டு பொதுக்கூட்டத்தில் ‘சமூகநல பிரிவு’ சிறந்த பிரிவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் செயலாளர் திருமதி மேஷ்கலா ‘சிறந்த உறுப்பினர்’-கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக ஆரம்பப்பள்ளிக்கான மதிப்பீட்டு தேர்வில்  ( யூ.பி.எஸ்.ஆர்) சிறப்பு தேர்ச்சி பெற்ற இராமகிருஷ்ணா தமிழ்பள்ளியின் எட்டு மாணவர்களுக்கு நற்சான்றிதழும் ரொக்கப்பணமும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் சிறந்த சேவைக்கு முதுகெலும்பாகத் திகழும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் களுக்கும் தனது நன்றி மாலை சூட்டினார் இவ்வட்டாரப் பேரவையின் தலைவர் விவேகநாயகன் தர்மன்.