“மலேசியாவை காப்பாற்ற மக்கள் பிரகடனம்”

Admin
நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள்
நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள்

கடந்த 8/5/2016-ஆம் நாள் பினாங்கு மாநில அரசு ஏற்பாட்டில் “மலேசியாவை காப்பாற்ற மக்கள் பிரகடனம்” எனும் நிகழ்வு மக்கள் ஆதரவுடன் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் அலையென , கெபலா பத்தாஸ் பகுதியில் அமைந்துள்ள மில்லினியம் அரங்கத்தில் கூடினர். இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமது அஸ்மின் அலி, அமானா கட்சி தேசியத் தலைவர் முகமது சாபு, பினாங்கு முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் மற்றும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒத்மான் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் அனைத்து தரப்பினரும் அரசியல் கருத்து வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து மத்திய அரசின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட செயல்பட வேண்டும் என்றார்.