மாநில அரசு ‘eMOSPlan’ கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

Admin
emos

பெர்மாதாங் பாவ் – பினாங்கு மாநில அரசாங்கம் பினாங்கு நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை (PLANMalaysia@Penang) மூலம் மின்னணு கண்காணிப்பு கட்டமைப்பு திட்டம் (eMOSPlan) எனப்படும் கண்காணிப்பு அமைப்பு பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பினாங்கு கட்டமைப்புத் திட்டம் 2030 (RSNPP2030) செயல்படுத்தப்படுவதை முழுமையாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலியை PLANMalaysia@Penang ஆல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

 

“eMOSPlan மூலம்,பினாங்கு கட்டமைப்புத் திட்டம் 2030 (RSNPP2030) ஆவணத்தில் உள்ள அனைத்து கொள்கைகள், செயல்திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயலாக்கம், செயல்திறன் ஆகியவற்றை அளவிடப்படும்.

 

“இந்த செயலி மூலம், நேரடியாக செயல்படுத்தும் முகமைகளை சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புடைய மாநில நிறுவனங்களையும் உள்ளடக்கும்.

 

“எனவே, இந்த பயன்பாட்டின் மூலம், RSNPP2030 மதிப்பாய்வு செயல்பாட்டில் திருத்தப்பட வேண்டிய பொருத்தமற்ற கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நுணுக்கங்களைக் கண்டறிய முடியும்.

 

“ஒவ்வொரு செயல்பாடும் மாநில ஏஜென்சியின் செயல்திறன் அளவையும் இந்த செயலியின் மூலம் பார்க்கலாம். இதன் வாயிலாக, பினாங்கு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்று இன்று மாநில அளவிலான நகர திட்டமிடல் தினத்துடன் இணைந்து பட்டர்வொர்த் அரங்கில் இப்பயன்பாட்டைத் தொடங்குவதற்கு முன் சாவ் தனது உரையில் கூறினார்.

 

மேலும் பினாங்கு உள்ளூராட்சி, நகர் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் ஆட்சிக்குழுத் தலைவர் ஜேசன் ஹெங் மூய் லைய், PLANMalaysia@Penang இயக்குநர் ரோசிதா ஹமித், பினாங்கு மாநகர கழகம் (MBPP) மேயர் டத்தோ Ir. ராஜேந்திரன் மற்றும் செபராங் பிறை மாநகர கழகம் (MBSP) மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

emos 2

மாநில அளவிலான நகர திட்டமிடல் தினத்தைப் பற்றிப் பேசுகையில், பினாங்கின் வளர்ச்சியில் நகர திட்டமிடுபவர்கள் ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது அவசியம் என குறிப்பிட்டார்.

 

மாநில அளவிலான நகர திட்டமிடல் தினம் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஏனெனில் அவர்கள் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான மாநிலத்தின் உந்துதலுக்கு உந்து சக்தியாகச் செயல்படுகின்றனர் என எங் தமதுரையில் குறிப்பிட்டார்.