மாநில அரசு EV சார்ஜிங் நிலையங்களை அதிகரிக்க இணக்கம்

Admin

டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அதிக மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களைப் பொருத்த இணக்கம் பூண்டுள்ளது.

மாநில இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்டிப் சிங் டியோவின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் பிரச்சனைக்கு எதிராக எரிப்பொருள் வாகனங்களின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

“தற்போது பினாங்கு முழுவதும் 19 EV சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இதன் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்து செயல்பட மாநில அரசு உத்தேசித்துள்ளது.

“பிரபலமான EV சார்ந்த டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு மலேசியாவில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பினாங்கில் எதிர்காலத்தில் EVகளின் வருகையைப் பெறுவதற்குத் தயாராக உள்ளது.

“எனவே, இந்த அடிப்படை வசதியை அதிகரிக்கவும், இது எனது புதிய போர்ட்ஃபோலியோவின் முக்கிய கூறுகளில் ஒன்றாகத் திகழ்கிறது,” என்று மனிதவள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்டிப், தாமான் பிரி ஸ்கூல் செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

எனவே, சந்தையில் EV நிறுவனங்கள்
மலேசியர்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இணக்கம் கொள்ள வேண்டும் என்று டத்தோ கெராமட் மாநில சட்டமன்ற உறுப்பினரான ஜக்டிப் நம்பிக்கை தெரிவித்தார்.

EV உரிமையாளர்களுக்கு அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கப்பட வேண்டும்” என்று ஜக்டிப் சூளுரைத்தார்.