பந்தாய் ஜெரெஜாக் – மாநில அரசு நீர் கட்டண உயர்வு குறித்து கூட்டரசு அரசாங்கத்திடம் தேசிய நீர் சேவை ஆணையத்தின் (SPAN) மூலம் வழங்கிய மணு மறுஆய்வு செய்யப்படும். பினாங்கு நீர் விநியோக வாரியம் நீர் விநியோகப் பொறியியல் மேம்பாட்டுத் திட்டத்தை 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவே இக்கட்டண உயர்வு அமல்படுத்துகிறது.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறுகையில், பினாங்கு உள்நாட்டு நீர் கட்டணம் சராசரி முதல் 1,000 லிட்டருக்கு ரிம0.32 என விதிக்கப்படுவதை மறு ஆய்வுக்கு உட்கொள்ளப்படும், ஏனெனில் இது தேசிய சராசரி கட்டணமான ரிம0.69சென் காட்டிலும் 116 விழுக்காடு குறைவாகும்.
மலேசியாவிலே, பினாங்கு மாநிலத்தின் நீர் கட்டணம் (ரிம0.32சென்) தான் மிகவும் குறைவு. பினாங்கு நீர் விநியோக வாரியம் பொது மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு கூடுதல் கட்டணத்திற்கான கழிவை வழங்கி இன்று அதிகப்படியான மானியங்கள் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
வருகின்ற இரண்டு ஆண்டுகளுக்கு ரிம163.2 மில்லியன் மானிய ஒதுக்கீடு போதாது, மேலும் நீர் வாரியத்திற்கு நீர் விநியோகப் பொறியியல் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அதிகமான நிதி ஒதுக்கீடுத் தேவைப்படுகிறது.
இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் நீர் பங்கீட்டு முறை தவிர்க்கப்படுவதோடு 2050-ஆண்டு வரை நீர் நிலைத்தன்மை உறுதிச்செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி, 1.76 மில்லியன் பயனீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் வகையில் நீர் விநியோக வாரியம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் நீர் கட்டண உயர்வு குறித்து மறு ஆய்வு செய்ய முற்படுகிறது” என வாரியத்தின் தலைவரும் முதல்வருமான சாவ் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.
நீர் கட்டணக் கழிவு குறைக்கப்படுவதன் மூலம் நீர் விநியோக வாரியம் 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் 5 பிரதான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பட்டர்வொர்த் – பினாங்கு கடல்வழி(1200மி.மீ) இரட்டை குழாய் இணைப்பு பொருத்துதல்(மூன்றாவது கடல்வழி குழாய் இணைப்பு), சுங்கை பேராக் நீர் இணைப்புத் திட்டம் (SPRWTS), நீர் நிலையம், குளம் மற்றும் நீர் சேமிப்பு வீடு ஆகியவற்றில் நீர் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துதல், குழாய் பராமரிப்புப் பணி ஆகியவை இடம்பெறும் என நீர் விநியோக வாரிய தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பொறியியலாளர் ஜசானி மைடின்சா விவரித்தார்.