பினாங்கு மாநில அரசின் ஏற்பாட்டில் 21-ஆவது பினாங்கு தொழிலியல் & முதுகலை விரிவு கண்காட்சி மற்றும் மாநாடு அண்மையில் செபராங் பிறை அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சி இளைஞர் மற்றும் குறிப்பாக மாற்றுதிறனாளிகளுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இந்நிகழ்வினில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய முதலாம் துணை முதல்வர் டத்தோ சாகியுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கமானது மற்றுத்திரனாளிகளிடையே ஓர் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை வெளிக்கொண்டு வருவதே ஆகும். இவர்களின் திறமை மற்றும் ஆற்றல்களை அனைத்துத் துறைகளிலும் ஈடுப்பட ஒரு ஊன்றுகோளாக அமையும் என 21-ஆவது பினாங்கு தொழிலியல் & முதுகலை விரிவு கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ சாகியுடின். அதோடு, உடல் ஊனமுற்றோர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவர்களை மேம்படுத்த தொழில் முனைவர்கள் அவர்களின் திறனுக்கு தேவையானவற்றை வழங்கத்தில் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல் சுதந்திரமாக வாழவும் தேசிய வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் எனவும் பினாங் துங்கால் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
இத்தொழிலியல் கண்காட்சியில் 200க்கும் மேற்ப்பட்ட கூடங்கள் தொழில் நிறுவனங்களும் பொதுநல அமைப்புகளும் ஒத்துழைத்துப்பில் அமைக்கப்பட்டன. இதனிடையே, ஒரு சில தொழிற்சாலைகள் அங்கேயே நேர்முக தேர்வை நடத்தினர் என்பது பாராட்டக்குறியதாகும். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் உடல் ஊனமூற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான ஒரு எதிர்காலத்தை தேடிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பினாங்கு மாநில வேலையில்லா திண்டாட்டம் 2.9% குறைந்துள்ள நிலையில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் நீடித்திருக்கவும் அதிலிருந்து அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இளைய சமுதாயம் பினாங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும் வகையில் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என ஏற்பாட்டு குழுவினர் வலியுறுத்தினர். பினாங்கு மாநிலத்தின் சமூகநலமிக்க மாநிலம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்