வடப் பகுதிக்கான மாபெரும் முடித்திருத்தும் போட்டிக்கு சிறந்த வரவேற்பு

img 20240110 wa0201

ஜார்ச்டவுன் – வடக்கு பகுதி தூதரக முடித்திருத்தும் கழகம் மற்றும் மலேசிய இந்தியர் சமூக சிகையலங்கார மேம்பாட்டுச் சங்கம் (MIHASS) இணை ஏற்பாட்டில் பினாங்கில் முதல் முறையாக நடைபெற்ற 2024 வடப் பகுதிக்கான மாபெரும் முடித்திருத்தும் போட்டி பிராங்கின் பேரங்காடியில்
நடைபெற்றது.

img 20240111 wa0060
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், வழக்கறிஞர் மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
(உடன் ஏற்பாட்டுக் குழுவினர்).

“மாநில அரசாங்கம் மற்றும் கூட்டரசு அரசாங்கம் இளைஞர்கள் தற்போதைய தொழில்துறை தேவைக்கேற்ப தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி (TVET) துறையைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறது. சிகையலங்காரம், தையல் பயிற்சி, வாகனம் பழுது பார்க்கும் தொழில் போன்ற திறன் கல்வியானது பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் அவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களின் அடிப்படையில் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
img 20240111 wa0065
“கூடுதலாக, TVET கல்வி இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதோடு எதிர்காலத்தில் சொந்த தொழில் தொடங்கி வருமானம் ஈட்டவும் துணைபுரிகிறது,” என 2024 வடப் பகுதிக்கான மாபெரும் முடித்திருத்தும் போட்டியின் பரிசளிப்பு விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
img 20240109 wa0077

“இம்முறை நடத்தப்பட்ட போட்டியில் அனைத்து இன இளைஞர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இது இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதோடு, அனைத்து இனங்களைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர்களுக்கு அவர்களின் படைப்பாற்றல், கற்பனை மற்றும் திறமையை வெளிப்படுத்த சிறந்த தலமாக அங்கீகரிக்கப்பட்டது.

“இப்போட்டி எதிர்காலத்தில்
சிறந்த சிகையலங்கார நிபுணர்களாகவும் உள்நாடு மற்றும் அனைத்துலக முடித்திருத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள சிறந்த தூண்டுகோளாகவும் அமையும்,” என செனட்டர் லிங்கேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

20240107 154941
2024 வடப் பகுதிக்கான மாபெரும் முடித்திருத்தும் போட்டியினை ஆட்சிக்குழு உறுப்பினர்
டேனியல் கூய் ஸி சென் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இப்போட்டியின் முதன்மை ஆதாரவாளரான கே.எஸ்.கே வின் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் உரிமையாளர் டத்தோ நாதன், வழக்கறிஞர் மகேஸ்வரன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி சிறந்த ஆக்கப்பூர்வமான நவீன முடித்திருத்துதல், Mullet, Burst Fade Rookie மற்றும் Champion of Champion
என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

“இம்முறை நடத்தப்பட்ட போட்டியில் Burst Fade Rookie எனும் பிரிவு பிரத்தியேகமாக 20 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பிரிவில் கலந்து கொண்ட இளம் வயதினர் மிகுந்த அனுபவம் கொண்ட முடித்திருத்தும் நிபுணர் போல் முடி வெட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது,” என இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மதி கூறினார்.
20240107 123819

சிறந்த ஆக்கப்பூர்வமான நவீன முடித்திருத்தும் பிரிவில் முதல்நிலை வெற்றியாளராக முகமட் அய்மான், இரண்டாம் நிலையில் ஷெட் முகமட் அரிவ், மூன்றாவது நிலையில் இளமாறன் உதயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நான்குப் பிரிவுகளில் வெற்றிப் பெற்ற முதல் ஐந்து நிலை வெற்றியாளர்கள் ரொக்கப்பணம், முடித்திருத்தும் கருவிகள், கேடயம் பெற்றுக் கொண்டனர்.

மேலும், Champion of Champion எனும் பிரிவின் வெற்றியாளருக்கு ரொக்கப்பணம், கேடயம் மட்டுமின்றி ‘Tuff’ நிறுவனத்தின் தூதராகும் வாய்ப்பும் வழங்கப்பட்டது, பாராட்டக்குரியது.

2024 வடப் பகுதிக்கான மாபெரும் முடித்திருத்தும் போட்டியினை இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினரான டேனியல் கூய் ஸி சென் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.