பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் கூட்டு உரிமைத்துவ திட்டத்தை (Skim Pemilikan Bersama) வாடகைக்கு மனை வாங்கும் திட்டமாக (konsep Skim Sewa Beli) மாற்றப்படுகிறது. இத்திட்டம் தாமான் செருலிங் எமாஸ் மற்றும் தாமான் சுங்கை டூரி பெர்மாய் ஆகிய இரண்டு வீடமைப்புத் திட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்படும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ .
தாமான் செரூலிங் எமாஸ்யில் இரண்டு புலோக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தமாக 359 யூனிட்கள் கட்டப்படவுள்ளன. இத்திட்டத்தில் 51 யூனிட்கள் பினாங்கு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வாடகைக்கு மனை வாங்கும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக தாமான் செருலிங் எமாஸ் குடியிருப்பின் மாத வாடகையும் பராமரிப்பு வேவைக்காகவும் பின்வரும் 15 ஆண்டுகளுக்கு தத்தம் ரிம 100 மற்றும் ரிம50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
இதனிடையே, தாமான் சுங்கை டூரி பெர்மாய் நகர வீடுகளாக மொத்தமாக 224 யூனிட் வீடுகள் கட்டப்படவுள்ளன. இத்திட்டத்தில் 104 வீடுகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வாடகைக்கு மனை வாங்கும் திட்டத்தின் கீழ் மாத வாடகையும் பராமரிப்பு சேவைக்காகவும் பின்வரும் 23 ஆண்டுகளுக்கு தத்தம் ரிம 150 மற்றும் ரிம 20-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாலச்சிறந்தது.
இதுவரை தாமான் செரூலிங் எமாஸ் குடியிருப்பில் மூன்று விண்ணப்பதாரர்கள் தேர்வாகியுள்ள வேளையில் தாமான் சுங்கை டூரி பெர்மாய் வீடமைப்புக்கு ஏழு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்காக 170 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இப்புதிய திட்டத்திற்கு இன்னும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் மாநில அரசு இத்திட்டத்தை பிற வீடமைப்புப் பகுதிகளில் விரிவுப்படுத்த இலக்கு கொண்டுள்ளது. இதற்கு வங்கிகள் அதிகமான வீடமைப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பதே முக்கிய காரணியாக அமைவதாக சாடினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.var d=document;var s=d.createElement(‘script’);