பினாங்கு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியீடு செய்த அறிக்கையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொள்முதல் செய்த பங்களா வீட்டிற்கும் மாநில அரசின் தாமான் மங்கிஸ் நில விற்பனைக்கும் இடையில் ஊழல் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாநில அரசின் தாமான் மங்கிஸ் நில விற்பனைக்கும் எனது வீடு வாங்கியதற்கும் இடையில் எவ்வித ஊழலும் ஏற்படவில்லை, எனவே ஊழல் ஆணையம் மிக விரைவாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்த விரும்புகிறேன்” எனக் கூறினார் முதல்வர். பிற வழக்குகளைக் காட்டிலும் இந்த வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையம் மிக விரையாகச் செயல்பட்டாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன் எனத் தெரிவித்தார்.
இந்தக் கூற்று எதிர் தரப்பினரின் அவதூறு மற்றும் நேர்மையற்ற அரசியல் தாக்குதல் என்பதை கீழே குறிப்பிட்டுள்ள 5 காரணிகள் மெய்ப்பிக்கிறது:-
1. ரிம2.8 மில்லியன் மதிப்புடைய முதல்வர் வீட்டிற்கு ரிம2.1 மில்லியன் வங்கி கடனுதவிப் பெற்றும் மீதமுள்ள ரிம700,000 ரொக்கத்தை முதல்வர் மற்றும் சட்டமன்ற பிரதிநிதி உதவித்தொகையிலிருந்து கட்டப்பட்டது.
2. மாநில அரசின் நில விற்பனை திறந்த குத்தகை முறையில் நடத்துவதோடு கூடுதல் மதிப்பு குறிப்பிட்ட வாங்குநருக்கே வழங்கப்படும்.
3.மாநில குத்தகை குழு மாநில அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறையைப் பின்பற்றுவதோடு அக்குழுவிற்கு முதல்வர் தலைமையேற்கவில்லை,
4.முதல்வர் வீட்டு விற்பனையாளர் மாநில அரசின் நில குத்தகைப் பெற்ற நிறுவனத்துடன் சம்பந்தப்படவில்லை, பங்குதாரர் அல்ல அதுமட்டுமின்றி இயக்குநர் வாரிய உறுப்பினரும் அல்ல.
5.கடந்த 19 ஆகஸ்டு 2015-ல் பாகான் அம்னோ பிரிவுத் தலைவர் சாய்க் உசின் மைடின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் முதல்வரிடம் 2 முறை வாய்மொழியாக மன்னிப்புக் கேட்டதோடு மாநில அரசு நில விற்பனைத் தொடர்பில் ஊழல் பெற்றதாகக் கூறிய அவதூறு வழக்கும் மீட்டுக் கொள்ளப்பட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பினாங்கு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முதல்வரின் மாதாந்திர வீட்டு வாடகை ரிம5,000 குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறியது. இக்கூற்று உண்மை என்றால் ஏன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இவ்விசாரணைத் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யவில்லை.
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் ஏனெனில் மாநில அரசு தூய்மையான நிர்வாகத்தை நடத்துவதோடு அனைத்துலக வெளிப்படை நிறுவனம் திறந்த குத்தகை முறை அமலாக்கம் பற்றி பாராட்டியுள்ளது. எனவே, இக்கூற்று அரசியல் எதிரிகள் நடத்தும் அவதூறு வெளிப்பாடு என்பதை முழு நம்பிக்கையுடன் நிருபிப்பேன்” என செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.} else {