பினாங்கு மாநில அரசு வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வுக்காணும் பொருட்டு வெள்ள நிவாரண ஆட்சிக்குழுவின் கீழ் குழாய் வடிகால் மற்றும் வெள்ள நிவாரண திட்டத்தை ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்த இலக்கு கொண்டுள்ளது.
உள்ளூர் அரசு, பொது போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரணம் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், மாநில அரசு உள்ளூராட்சி மன்றங்கள், மாநில பொதுப்பணித் துறை மற்றும் மாநில வடிகால் மற்றும் பாசன துறை உடன் இணைந்து வெள்ள நிவாரண பிரச்சனைக்கு தீர்வுக்காண பல திட்டங்களை வகுத்துள்ளன என சுங்கை பினாங்கு வெள்ள நிவாரண திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மாநில அரசு தொலைதூர நோக்கில் அறுபது வெள்ள நிவாரண திட்டத்தித்தை வகுத்துள்ளன. இத்திட்டத்திற்கு மில்லியன் அளவில் செலவினங்கள் உள்ளது என்றும் இது மாநில அரசு பெரும் சவாலாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
அண்மையில், பினாங்கில் சில மாவட்டகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு சுங்கை பினாங்கு மற்றும் ஜெலுந்தோங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தது தான் காரணம் என குறிப்பிட்டார். தொடர்ந்தாற் போல இரண்டு மணி நேரம் பெய்த மழையில் நீர் மட்டம் 300-600மில்லி மீட்டர் ஏறியது. அந்நேரத்தில் நிலைமையை சமாளிக்க பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் சுங்கை பினாங்கு ஆற்றின் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். விரைவில் தென்மேற்கு மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு வடிகால் சாக்கடைகள் அமைக்க மாநில அரசு திட்டம் கொண்டுள்ளது.
மாநில அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரண பிரச்சனைக்கு நிதியம் விண்ணப்பித்தும் இன்று வரை எவ்வித தகவலும் வழங்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. விரைவில் மத்திய அரசு பினாங்கு மாநில வெள்ள நிவாரண நிதிய விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் என தாம் பெரிதும் நம்புவதாக அறிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.var d=document;var s=d.createElement(‘script’);