பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு 13-வது முறையாக மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வைசாக்கி என்பது சீக்கியர்களின் புத்தாண்டைக் குறிப்பதாகும். இந்நாளை சீக்கியர்கள் குடும்பத்தாருடனும் சுற்றத்தாருடனும் மிக விமரிசையாகக் கொண்டாடுவர்.
பினாங்கு மாநிலத்தில் வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பு கடந்த 19/4/2014-ஆம் நாள் பினாங்கு டைம் ஸ்குவே அரங்கில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்குச் சிறப்பு பிரமுகராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் காலஞ்சென்ற திரு கர்பால் சிங் அவர்களின் குடும்பத்தினர் வருகையளித்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஜெலுந்தோங் புலி என்றழைக்கப்படும் அமரர் திரு கர்பால் சிங் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது என்றால் மிகையாகாது. இந்நிகழ்வில் சீக்கியர்கள் மக்களுக்கும் கொள்கைக்கும் குரல் கொடுத்து சிங்கமாக வலம் வந்த திரு கர்பால் சிங் நினைவலைகளில்அனைவரும் நினைவுக்கூர்ந்தனர்.
இந்நிகழ்வில் சீக்கியர்களின் வண்ணமயமான பாரம்பரிய நடனங்கள்
பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சீக்கியர்களின் பாராம்பரிய உணவுகள் பரிமாரப்பட்டது. வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மாநில முதல்வர் அனைத்து சீக்கியர்களுகளுக்கும் வைசாக்கி புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பினாங்கு மாநிலம் பல இனத்தவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள் கொண்டாடுவதோடு பினாங்கு வாழ் மக்களிடையே ஒற்றுமை வலுப்படுகிறது என வரவேற்புரையில் தெரிவித்தார் மாநில முதல்வர் லிம் குவான் எங். பினாங்கு மாநிலத்தில் சிறுபான்மையினராகச் சீகியர்கள் வலம் வந்தாலும் 13-வது முறையாக தொடர்ந்து நடத்தும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு மாநில முதல்வர் பாராட்டுகள் தெரிவித்தார். var d=document;var s=d.createElement(‘script’);