ஆலய நிர்வாகத்தினர் ஆகம நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் சமூகப் பணிகளிலும் மிகுந்த அக்கறைக் காட்ட வேண்டும் என 10வது முறையாக நடத்தப்படும் மாணவர்கள் சாதனை விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். அரசு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய நிர்வாகத்தினர் சிறந்த மாணவர்களுக்கு வெகுமதி வழங்கி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
சிறந்த மாணவர்களை அங்கீகரிக்கும் பொருட்டு பரிசாக ஊக்கத்தொகையை வழங்கும் ஆலய நிர்வாகத்தினர், அதற்கான நிதியை ஆலயத்தில் விற்கப்படும் அகல் விளக்கு விற்பனையின் மூலம் நிதித் திரட்டுவதாக ஆலயச் செயலாளர் திரு மாரியப்பன் தெரிவித்தார். இந்த உயரிய குறிக்கோளைக் கொண்டிருக்கும் ஆலயத்தின் சமூக சேவையைத் தாம் பாராட்டுவதாகக் கூறினார் பேராசிரியர் ப.இராமசாமி. யூ.பி.எஸ்.ஆர், பி.தி3, எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் என அரசு தேர்வுகளில் 4 ஏ-க்களுக்கு மேல் எடுத்த ஏறக்குறைய 100-இந்திய மாணவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்விற்காக ஏறக்குறைய ரிம15,000 செலவிடப்படுகிறது. இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற ஆதரவு அளிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் ஆலய நிர்வாகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களைக் கொளரவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்திற்குத் தூண்டுகோளாக வீற்றிடலாம் என்றார் பேராசிரியர். இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமை மிக்க மாணவர்களை அடையாளங்கண்டு அங்கீகரிப்பதன் வாயிலாக, பிற மாணவர்களும் உற்சாகப்படுத்தப்படுவர் என்றார். அண்மையில் ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய நிர்வாக ஏற்பாட்டில் 10-வது முறையாக நடைபெற்ற வெகுமதி வழங்கும் நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட பேராசிரிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் சாதனைப் புரிந்த இந்திய மாணவர்களுக்கும் வெகுமதி எடுத்து வழங்கினார்.if (document.currentScript) {