42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன ஆடவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த ஆலயப் பொறுப்பு இந்துகளின் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு இந்து அறப்பணி வாரியத்தின் செயற்பபட்டில் ஜாலான் சீராம்/ ஜாலான் தெலாகா ஆயர் எனும் இடுகாடு அருகில் அந்த ஆலயம் நிறுவப்பட்டது.
பின்னாளில் அந்த ஆலயத்தில் சிவராத்திரி, பல்லாக்கு மற்றும் இரத ஊர்வலம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.. 1987-ஆம் ஆண்டு மூன்று மாத காலக்கெடுவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்த ஆலயம் பல ஆண்டுகளாயினும் மாற்று நிலம் கிடைக்கப்பெறாமல் இருந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் இந்த ஆலயத்தின் நிலைப்பாட்டினை அறிந்து அவ்வாலயத்திற்குக் கூடிய விரைவில் சுமூகமானத் தீர்வு காண்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். 3-3-2013 –ஆம் நாள் அன்று ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்காக ஜாலான் பெர்மாதாங் பாவ் எனும் இடத்தில் 2 ஏக்கர் நிலத்தை இந்து அறப்பணி வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அந்த ஆலயத்திற்கான நிரந்தரமான நிலம் மற்றும் இந்து மத சமய வழிபாடுகளும் இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஈமச்சடங்குகள் அங்கு மேற்கொள்வதற்கான சிறப்புத் தலமாக அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆட்சிக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய லிம் ஹொக் செங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன், பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, , பினாங்கு இந்து சங்கத் தலைவர் திரு. சண்முகநாதன், இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாகி திரு. இராமசந்திரன் (இடமிருந்து வலம்)மற்றும் ஆலய உறுப்பினர்களும் இந்து அறப்பணி வாரியச் செயலவையினரும்