ஸ்ரீ டெலிமா தொகுதியைச் சேர்ந்த 660 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு

Admin

சிறந்த மனித மூலதனத்தின் உருவாக்கத்திற்குக் கல்விச் செல்வமே அடைப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. ஆகையால்தான், கல்வி கற்ற உயர்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாடும் மாநிலமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. நம் நாட்டில் தனியார் பள்ளிகளில்  தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பணக்கார சமுதாயம் ஒரு புறம் இருக்க கல்வி கற்றால் போதும் என்று தோட்டப் புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நம் சமுதாயத்தில் உள்ளனர். எனவேதான், ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு கல்வி அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்று பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் தலைவர்கள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.

‘இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து’ என்ற பழமொழிக்கொப்ப இளைமையில் நாம் கற்கும் கல்வி என்றும் அழியாச் செல்வமாக நம்மை தொடர்ந்து வந்து முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதைக் கருத்தில் கொண்டும் கல்வியின் அதிமுக்கியத்துவத்தை உணர்ந்தும் மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படித்து உயர வேண்டும் என்று ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு நேதாஜி இராயர் கடந்த டிசம்பர் 29-ஆம் திகதி நடைபெற்ற இலவச பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு நிகழ்ச்சியின் போது அறிவுறுத்தினார். வசதி குறைந்த பெற்றோர்களுக்கு உதவும் வண்ணம் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 660 ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான இந்த அன்பளிப்பு நிகழ்ச்சி துன் சார்டோனில் உள்ள பெமன்சார் மண்டபத்திலும் சுங்கை குலுகோர் சமூக மேம்பாட்டு மற்றும் பாதுகாப்புக் குழு மண்டபத்திலும் நடைபெற்றது.

13

பள்ளிச் சீருடைகளையும் அதற்கான இலவசப் பற்றுச் சீட்டுகளையும் பெற்றுக் கொண்ட மாணவர்களுடன் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு நேதாஜி இராயர்.